Wednesday 5 June 2013

வைக்கோல் சங்கிலி


வைக்கோல் சங்கிலி
மே மாதம் 23 ம் தேதியிட்ட தங்கம் பற்றிய கட்டுரையில் தங்க இறக்குமதியில் கட்டுப்பாடுகள் தேவை என்று சொன்னோம். இப்பொழுது மத்திய அரசு அதை நோக்கி ஓர் அடி வைத்துள்ளது. ஆம் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் மீதான வரியினை 6% லிருந்து 8% மாக உயர்த்தியுள்ளது. இது சற்று பலன் தரும். ஆனால் இது போதாது. ஏனென்றால் நடந்து முடிந்த ஏப்ரல் மாதத்தில் ம்ட்டும் சுமார் 48000 கோடி ரூபாய் மதிப்பிற்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் ஏப்ரல் இறக்குமதியான 17000 கோடியை விட அதிகம். இதனால் நடப்பு கணக்கு பற்றாக்குறை 98000 கோடியை எட்டியது. இந்நிலையில் வெறும் 2% வரி உயர்வு எந்த அளவு பயன் தரும். இது வைக்கோல் சங்கிலியால் மதங்கொண்ட யானையைக் கட்டும் முயற்சி.  ரெ.ஐயப்பன்

No comments:

Post a Comment