Saturday 11 February 2017

திரு.சு.ஜெயராஜ் எழுதிய கவிதை.



சமூக அறிவியல் துறையின் ஜியோ ஜெர்னி இதழ் நிறுத்தப்பட்டதற்கு என் உற்ற நண்பர் திரு.சு.ஜெயராஜ் வருந்தி எழுதிய கவிதை.
உனக்கென ஒரு கட்டுரையும் தராதவன்
உனக்கான திருப்பள்ளியெழுச்சி பாட வந்துள்ளேன்

புவியியல் பயணத்தின் உச்சரிப்பு
புயலென அறியாமல் அடக்கப்பட்டது
இதழ் நிறுத்தப்பட்டாலும்
இதயம் துடிக்கத்தானே செய்யும்

உள்ளிருக்கும்
எரிமலை அறியாமல்
எட்டுக்கால் பூச்சிகள் வலை பின்னும்
எரிமலை வாயில்
இதழ்
கன்னத்தில் முத்தமிடும்
கால்களை முத்தமிடுமா? அது
மூளைச்சாவு கண்டவர்களின்
முட்டாள் கனவு

நாம் என்ற சொல்லறியா
நமத்துப் போன வீணர்களே- என்
இதழ்கள் உனக்கு
இரங்கற்பா பாடுகிறது.
செத்துப் போ! செத்துப் போ! செத்துப் போ!
நீயல்ல, உன் ஆணவம் –அப்போது தான்
எங்கள் இதழ்கள் புன்னகை சிந்தும்


 நா  ஊமையாகும்
எங்கள் எழுது நா ஊமையாகும்
எங்கள் எழுது முள் குத்தியதால் தான்
உங்கள் இதயங்களுக்கு
செருப்பு அணிவித்து விட்டீரோ

பூக்களின் இதயத்தில்
புழுதியை இறைத்தது நீதியோ
பூக்களுக்கு
மணம் வீசத்தெரியும்
பிண வாடை தெரியுமா?

பூக்களுக்கு
வாய்மை பேசத் தெரியும்
வாயில் மை வைத்து பேசத்தெரியுமா?
அதனால் தான் வண்டுகள் தன் கூச்சலை
தேசிய கீதமாக அரிவிக்கச் சொல்கின்றன.

நான்கு பூனைகள் கண்ணை மூடி
நான்கு திசைகளையும் இருட்டாக்கி விட்டோம் என்றதாம்
பாவம் அதற்கென்ன தெரியும் – அது
நக்கிக் குடிக்கும் ஜீவன்கள் தானே.
பூனை குடித்தால் பரவயில்லை. அது
புலிகளிடமும் அதை எதிர் பார்க்கலாமா? – அதற்கு
கிழித்துக் குடிக்கத்தனே தெரியும்

வள்ளுவனும், பாரதியும்
புலியை புத்தனாக்கியதால்
பூனைகள் புலி வேடமிடுகின்றன
யாரவது அந்தப் பூனைகளிடம் சொல்லுங்கள்
பூனைகள் பூனைகள் தான்
புலிகள் புலிகள் தான்.

திரு.சு.ஜெயராஜ் – தமிழாசிரியர்