Monday 12 January 2015

என்னைப் பற்றி என் சீடர்கள்



என்னைப் பற்றி என் சீடர்கள்
உலகத்தின் பெரிய முட்டாள் – உலகில்
ஏழு அதிசியங்கள் என்பவன்,
எங்கள் எட்டாவது அதிசியமாய்
உலகத்தைப் பற்றி கற்பிக்க வந்த
தலை சிறந்த ஆசிரியருக்கு.

வான் புகழோடு வரலாற்றையும்,
புன்னகையோடு புவியியலையும்,
ஆர்வத்தோடு அரசியலையும்,
பொறுமையோடு பொருளியலையும்
கல்லுக்கும் கற்பிக்கும் கர்ணன் நீங்கள்.

பல சமயம் உங்கள் கண்டிப்பில்
அன்பு கலந்த கவலை இருந்தது.
எங்கள் கண்களின் இமைகளாகவும்,
பூவிற்கு வேலியாகவும் இருக்கும்
உண்மையின் தலைவனே!
தத்துவத்தின் தளபதியே

பல கலைகளில் கலைஞராகவும்,
கட்டுப்படுத்துவதில் ஜெயாவாகவும்,
எங்களை வழிநடத்தி செல்லும் தளபதியாகவும்,
இளைஞர்களின் சுவாசமாக திகழும் கெஜ்ரிவாலாகவும்,
நினைத்ததை முடிப்பதில் அன்னா ஹசாரேவாகவும்,
ஊமைகளின் குரலாக விளங்கும் ஒபாமாவாகவும்,
மொத்தத்தில் எங்களை சுத்தப்படுத்தும் மோடி.

கல்லும் கூட உங்கள் வகுப்பில் உணர்ச்சி பெறுகிறது.
மண்ணும் கூட நீங்கள் சொன்னால் தலையசைக்கிறது.
விண்மீன் கூட உங்கள் பாதைக்கு வழிவிடுகிறது
திமிங்கிலம் கூட உங்கள் வலையில் வசிக்கும்.

ஐஸ்வர்யா 9ம் வகுப்பு ஆ பிரிவு
பூஜிதா 9ம் வகுப்பு இ பிரிவு

என்னை பெருமைப்படுத்துவதற்காக அல்ல சிந்தனை திறன் மிகுந்த மாணவிகளை ஊக்கப்படுத்துவதற்காக. நன்றிகள்.


No comments:

Post a Comment