Saturday 13 December 2014

அமெரிக்காவின் வறுமைக்கு எதிரான ஐம்பது ஆண்டு போர்


அமெரிக்காவின் வறுமைக்கு எதிரான ஐம்பது ஆண்டு போர்
(இக்கட்டுரை நியூயார்க் நகர பட்டினித்திற்கெதிரான கூட்டணியின் (NewYark City Coalition against Hunger) செயல் திட்ட தலைவர் ஜொயல் பெர்க் என்னும் அறிஞர் டவுன் டு எர்த்  (Down to Earth – Dec 1 to 15) என்னும் பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியை அடிப்படையாக கொண்டது.)

     அமெரிக்க ஐக்கிய நாடுகள் உலக மக்களின் சொர்க்க பூமி, பணக்காரர்களின் நாடு என்றெல்லாம் புகழப்படும் கணவு தேசத்தின் முகத்திரையை  கிழிக்கிறார் நியுயார்க் நகர பட்டினித்திற்கெதிரான கூட்டணியின் (NewYark City Coalition against Hunger) செயல் திட்ட தலைவர் ஜொயல் பெர்க்.
 
1964ம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபர் ஜான்சன் அமெரிக்காவின் வறுமையை ஒழிக்க வறுமைக்கெதிரான போர் என அறிவித்து திட்டங்களை செயல்படுத்தினார். ஐம்பது ஆண்டுகளில் வறுமை முழூமையாக அமெரிக்காவிலிருந்து ஒழிக்கப்படும் என்று உறுதிமொழியளித்தார். இந்த ஆண்டோடு அமெரிக்காவின் வறுமைகெதிரான போர் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்நிலையில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வறுமையை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளனர் நியுயார்க் நகர பட்டினித்திற்கெதிரான கூட்டணி என்னும் அமைப்பு.
தற்போதைய நிலையில் சுமார் 49 மில்லியன் அதாவது 4 கோடியே 90 இலட்சம் அமெரிக்க மக்கள் வறுமையில் உள்ளனர். அதாவது அமெரிக்க மக்கள் தொகையில் 15% வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர். குறிப்பாக அப்பலேச்சியன் மற்றும் மிசிசிபி நிலக்கரி சுரங்க பனியாளர்களின் வாழ்க்கை மிகவும் கவலைகுறியதாக உள்ளது. இந்த சுரங்க துறையில் இந்தியா மற்றும் சீனாவின் போட்டியின் காரணமாக உற்பத்திச்செலவை குறைக்க மிகப்பெரிய அளவில் இயந்திரமயமாக்கியதால் வேலையிழப்பும், ஊதியகுறைப்பும் ஏற்பட்டுள்ளது. இது போன்ற கிராமப்பகுதிகளில் “உணவு பாலைவனங்கள்  அதாவது நல்ல நீர் மற்றும் நல்ல உணவு கிடைப்பதில்லை. அமெரிக்காவில் கறுப்பினத்தினர் மட்டும் வறுமையில் இல்லை வெள்ளையினத்தவரும் இதில் அடங்குவர்.
நியூயார்க் நகரத்தில் மட்டும் சுமார் 50,000 மக்கள் வீடின்றியுள்ளனர். பதிமூன்று இலட்சம் மக்கள் உணவுப்பாதுகாப்பின்றி உள்ளனர். பதினேழு இலட்சம் மக்கள் வறுமையில் உள்ளனர். அமெரிக்க ஐக்கிய நாட்டில் 400 கோடிஸ்வரர்கள் இரண்டு டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமான சொத்துள்ளவர்கள். அதே நேரத்தில் அந்நாட்டின் பட்ஜட் பற்றாக்குறை சுமார் 600 மில்லியன் டாலர்கள் ஆகும். அமெரிக்க ஐக்கிய நாட்டின் 40 மாகாணங்கள் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை அமுல்படுத்தவில்லை.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் வறுமையினை தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் மூலம் தீர்த்துவிட முடியும் என நம்பியது ஆனால் பலமான பொருளாதார அமைப்பு கொண்ட அமெரிக்காவினாலேயே வறுமையை ஒழிக்க முடியவில்லை. அமெரிக்க அரசு வறுமை ஒழிப்பு கடமையை தொண்டு நிறுவனங்களின் தலையில் கட்டி தப்பிக்க பார்த்ததால் இன்னமும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வறுமை ஒழியவில்லை. இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம் இது தான் அரசு தன் நிதியைக் கொண்டுதான் வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். பெரிய கார்பரேட் தொழில் நிறுவனங்களோ, சேவை அமைப்புகளோ ஒரு நாட்டின் வறுமையை ஒழித்துவிட முடியாது. பெருமுதலாளிகளின் வளர்ச்சி வேகத்தை ஒழுங்குபடுத்துவது, சிறு தொழில்களுக்கு ஊக்கம் போன்றவை தான் பொருளாதார சம நிலையை நோக்கி நாட்டை செல்ல வைக்கும். 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை சுருக்குவது, நேரடி மானியம் என்ற போர்வையில் மானியங்களை ஒழிக்க முற்படுவது என்று ஒருபுறமும்,  மறுபுறம் அதானி போன்ற பெரு முதலாளிகளுக்கு சொற்ப வட்டி விகித்ததில் 6000 கோடிக்கும் அதிகமாக கடனுதவி, ஆண்டுக்கு சுமார் ஐந்து இலட்சம் கோடி ரூபாய் அளவில் கார்பரேட் நிறுவனங்களுக்கு வரித்தள்ளுபடி, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியார்க்கு தாரை வார்த்தல், இரயில்வே துறையில் தனியார் மூலதனம், இரயில் நிலையங்களை தனியார்க்கு தாரை வார்த்தல் என செயல் பட்டுக்கொண்டிருக்கும் மத்திய அரசு சிந்திக்குமா?   ரெ.ஐயப்பன்

No comments:

Post a Comment