Thursday, 27 June 2013

கண்ணீர்த் துளி (உத்தரகண்ட் இயற்கைப் பேரழிவு)


கண்ணீர்த் துளி
(உத்தரகண்ட் இயற்கைப் பேரழிவு)


உன்னை காண வந்த எம்மை
விண்ணை காண வைத்தாயே
இறையை நாடி வந்த எம்மை
இரையாக்கிக் கொண்டாயே
பக்தியோடு வந்த எம்மை – உன்
சக்தியாலே வென்றுவிட்டாய்
எம்மை காண ஓடி வந்தாயோ - நீ
எம்மை கண்டு, கொண்டு சென்றாயோ?
உன் பாதையின் குறுக்கே வந்ததினால்
வாதைகள் பலவும் செய்தாயோ?
புனிதமான மலை நிலமே
மனிதம் மறந்து போனாயோ?
எம் உயிரை கிள்ளி போவதற்கே
உன் நீரை அள்ளி வந்தாயோ?
கருவறை காண வந்த எம்மை
கல்லறைக்குள் அனுப்பி விட்டாய்
நீண்டு வளர்ந்த மலைநிலமே
நிலை கலங்கியே போனாயோ?
என் கண்ணீர்த் துளியால் கெஞ்சுகிறேன்
உன் நன்னீர்ப் பெருக்கை நிறுத்திவிடு.  -ரெ.ஐயப்பன்

No comments:

Post a Comment