தீவிரமடையும் புவி வெப்பமாதல்
மனித செயல் பாடுகளால் புவி வெப்பமடைந்து கொண்டிருப்பது
நாம் அறிந்ததே. ஐபிசிசி வெளியிட்டுள்ள ஒர் அறிக்கையின் முக்கிய புள்ளிவிவரங்களை இங்கு
காண்போம்.
2000 முதல் 2010 வரையிலான பத்தாண்டுகளில் சராசரியாக
2.2% அளவிற்கு பசுமை அக வாயுக்களின் வெளியீடு அதிகரித்துள்ளது. இது 1970 முதல்
2000 ஆண்டுகளில் 1.7% மாக அதிகரித்துள்ளது. எனவே பசுமை அக வாயுக்களின் வெளியீடு அதிகரிக்கும்
வேகம் அதிகரித்து கொண்டிருக்கிறது. இதனால் புவி வெப்பமடைவது தீவிரமடையும்
1971 முதல் 2010 வரையிலான ஆண்டுகளில் கடல் மேல்பரப்பு
சராசரி வெப்பநிலை (75 மீட்டர்கள்) 0.110
செல்சியஸ் அளவிற்கு உயர்ந்துள்ளது.
1979 முதல் 2012 வரையிலான ஆண்டுகளில் ஆர்டிக்
கடல் பரப்பில் உள்ள பனி பத்தாண்டுகளுக்கு 3.5% முதல் 4.1% அளவிற்கு குறைந்துள்ளது.
1901 முதல் 2010 வரையிலான 110 ஆண்டுகளில் சராசரி
கடல் நீர் மட்டம் 0.19 மீ உயர்ந்துள்ளது. ரெ.ஐயப்பன்
No comments:
Post a Comment