நாகரீகம் என்னும் அநாகரீகம்
செல்பி எடுத்துக்கொள்வது என்பது
தற்போது சிறுவர்கள் முதல் பாரத பிரதமர் வரை பலருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கிறது.
தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக்கொள்வது, வித விதமான இடங்கள், வேறுபட்ட
மனிதர்களுடன் தன்னை இணைத்துக்கொண்டு செல்பேசியில் தனே புகைப்படம் எடுத்துக்கொள்வது
என்பதே செல்பியின் நடைமுறையாக உள்ளது.
ஒரு கேளிக்கைக்காக அல்லது அரிதான
தருணங்களில் சுய விழிப்புணர்வுடன் செல்பி எடுப்பது என்பது சாதாரணமான ஒன்றாக
கருதிவிடலாம் ஆனால் எப்பொழுது பார்த்தாலும் செல்போனும் செல்பியுமாக இருப்பது
என்பது நமது உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்ல விஷயம் இல்லை என்கிறார்கள்
ஆராய்ச்சியாளர்கள்.
அரிய சான்றோர்களை, பெரியவர்களை
முன்னிறுத்தி பணிந்து இருப்பது தான் இந்திய பாரம்பரியம். ஆனால் இந்த செல்பியிலோ எல்லாவற்றிலிமும்
தன்னையே முன்னிறுத்தி, தனக்கு தானே முதன்மையிடம் கொடுப்பது சுயநல எண்ணங்கள்
மேலோங்கத்தான் இடம் கொடுக்கும்.
இதுமட்டுமின்றி செல்பி
ஆர்வத்தில் பலர் உயிரிந்த சம்பவங்களும் நம்மை வருத்தத்தில் ஆழ்த்துகின்றன.
மகாராஷ்டிராவில் 16 இடங்களில் செல்பி எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
சுயவிளம்பர சுயநல போக்குகளை வளர்த்துவிடும்
செல்பி போன்ற மேற்கத்திய வழக்கங்களுக்கு அடிமையாகாமல், கடந்துசெல்லும் வகையில்
சிந்தனை தெளிவு நம் இளைஞர்களுக்கு வர வேண்டும். இந்திய பாரம்பரியம் போற்றும்
இந்திய பிரதமரே சற்று அடக்கமாக, முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுங்கள்.
புகைபடங்களில் தொலைந்து போகாமல், எளிமையை மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில்
வாழ்ந்து காட்டுங்கள் ரெ.ஐயப்பன்
No comments:
Post a Comment