Friday, 12 August 2016

இந்தியாவின் ஜுராசிக் பார்க்



இந்தியாவின் ஜுராசிக் பார்க்
65 மில்லியன் முதல் 150 மில்லியன் வருடங்களுக்கு முன் இந்தியாவில் டைனோசர்கள் வாழ்ந்தது என்ற தகவல் உங்களுக்கு ஆச்சர்யத்தை அளிக்கக்கூடும். நிலவியலாளர்கள் தற்போது இதனை உறுதி படுத்தியுள்ளனர். நிலவியல் கால அட்டவணைப்படி ஜூராசிக் காலத்திய அதாவது 240 முதல் 135 மில்லியன் ஆண்டுகளுக்கிடையே வாழ்ந்த டைனோசர்களின் இடுப்பெலும்புகளின் படிமங்களை கண்டுபிடித்துள்ளனர். இந்திய மற்றும் ஜெர்மானிய நிலவியலாளர்கள் குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள லொதாய் கிராமத்தில் நடத்திய அகழாய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.
150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய டைனோசர்களின் கால் அச்சு ஜெய்சால்மரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெய்நாராயன் பல்கலை கழத்தை சார்ந்த நிலவியல் ஆராய்ச்சியாளர்கள் நட்த்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. இந்த வகை டைனோசர்களின் முட்டை, எலும்பு மற்றும் பற்கள் ஏற்கனவே இந்தியாவில் கிடைத்திருக்கின்றன. இந்த வகை டைனோசர்களின் படிமங்கள் பிரான்ஸ், இத்தாலி, போலந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இவையெல்லாம் இமயமலைகள் உருவாவதற்கு முன் உள்ள காலத்தை சார்ந்துள்ளது.
தமிழகத்தில் அரியலூரில் உள்ள பெரியக்குறிச்சி கிராமத்தில் சுமார் 12.5 கிலோ கிராம் எடையுள்ள டைனோசர் முட்டை கிடைத்துள்ளது. இதே அரியலூரில் சேலம் பெரியார் பல்கலை கழத்தை சார்ந்த திரு.இராம்குமார் மற்றும் அவர் தலைமையிலான நிலவியல் ஆய்வாளர்கள் அரியலுரில் டைனோசரின் 20 முட்டைகளின் படிமங்களை கண்டறிந்துள்ளனர். இவை நீண்ட கழுத்துள்ள சைவ டைனோசர்கள் என கண்டறிந்துள்ளனர். சர்வதேச டைனோசர் ஆய்வு மையம் இதனை டைனோசரின் முட்டைகள் என உறுதி செய்துள்ளது.
இந்தியாவின் மீது மோதிய விண்கல் மற்றும் அதனைத் தொடர்ந்த எரிமலை வெடிப்பு செயல்களால் இந்தியாவில் டைனோசர்கள் அழிந்திருக்கலாம் என நிலவியலாளர்கள் கருதுகின்றனர்.
ரெ.ஐயப்பன்

           

No comments:

Post a Comment