தமிழக மக்களே உங்களுக்கு ஒரு
சபாஷ்
மக்கள் தங்கள் தரத்திற்கு ஏற்பவே
தங்களுடைய அரசாங்கத்தை தேர்தெடுக்கின்றனர்........ பிளாட்டோ
கலாசாரமிக்க சமுகம் என்பது ஜனநாயகமான, ஊழலற்ற,
சமத்துவமான, கலாசார வேறுபாடுகளை அரவணைக்கும் சமுகமாகத்தான் இருக்க முடியும். இந்த
2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் நான்கில் மூன்று பங்கிற்கு மேல் மக்கள் ஜனநாயகமற்ற,
ஊழல் மிகுந்த, ஆடம்பர அரசியலுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதிமுக, திமுக வை
தாண்டி சிந்திக்க கூட பெரும்பாலான தமிழர்கள் தயாரக இல்லை என்பது வேதனையிலும்
வேதனை. இந்த தேர்தலில் வென்றது உண்மையில் அதிமுக+திமுக கூட்டணி தான். அறமற்ற
மக்களிடம் ஜனநாயகம் என்ற ஆயுதத்தை கொடுக்கும் போது அவர்கள் அந்த ஆயுதத்தை,
தங்களுக்கு எதிராகவே பயன்படுத்திக்கொள்கின்றனர். இந்த தேர்தலில் அது தான்
நடந்துள்ளது. மனிதர்களை விமர்சித்து விட்டு, சாத்தானை ஆதரித்து விட்டனர். இதற்கு
தண்டனையை இவர்களோடு சேர்ந்து நாமும் பெறவேண்டியது தான். ஆளும் கட்சி மற்றும்
எதிர்கட்சி இரண்டும் ஒரே கட்சி தான், ஒரே கூட்டணி தான் இனி இவர்கள் காட்டில் மழை
தான். மாற்றங்களுக்கு தயங்கும் சமூகம் ஓடத்தயங்கும் நீர் போல. ஓடத்தயங்கும் என்பது
தேங்கிய சாக்கடையே. சுத்தம் செய்யவந்த ஒரு சில எளியவர்களை அடித்து விரட்டிய தமிழக
மக்களே உங்களுக்கு ஒரு சபாஷ். ரெ.ஐயப்பன்
No comments:
Post a Comment