கவி அஞ்சலி
அக்னிச் சிறகுகளை
அலை தவழும் 
மணலுக்கு தந்து விட்டோம்
அறிவின் சிகரத்தை 
ஆழ் மணலில் 
விதைத்து விட்டோம்
கலாம் என்னும்
கலா ரசிகனை
காலனுக்கு தந்துவிட்டோம்
கடுமையாக 
உழைக்கச் சொன்னவனை 
உறங்க சொல்லிவிட்டோம்
எளிமையாக 
வாழ்ந்தவனை 
எளிதாக இழந்து விட்டோம்
கலாம் உன் தொண்டு 
நீள வேண்டும் – நாங்கள்
உனை கண்டு வாழ வேண்டும்
வருவாயா? 
                        ரெ.ஐயப்பன் 
No comments:
Post a Comment