அமெரிக்காவின் வறுமைக்கு எதிரான ஐம்பது ஆண்டு போர்
(இக்கட்டுரை நியூயார்க் நகர பட்டினித்திற்கெதிரான
கூட்டணியின் (NewYark City Coalition against Hunger) செயல்
திட்ட தலைவர் ஜொயல் பெர்க் என்னும் அறிஞர் டவுன் டு எர்த் (Down to Earth – Dec 1 to 15) என்னும்
பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியை அடிப்படையாக கொண்டது.)
அமெரிக்க ஐக்கிய நாடுகள் உலக மக்களின் சொர்க்க பூமி, பணக்காரர்களின் நாடு என்றெல்லாம் புகழப்படும் கணவு தேசத்தின் முகத்திரையை கிழிக்கிறார் நியுயார்க் நகர பட்டினித்திற்கெதிரான கூட்டணியின் (NewYark City Coalition against Hunger) செயல் திட்ட தலைவர் ஜொயல் பெர்க்.
1964ம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க
ஐக்கிய நாடுகளின் அதிபர் ஜான்சன் அமெரிக்காவின் வறுமையை ஒழிக்க வறுமைக்கெதிரான
போர் என அறிவித்து திட்டங்களை செயல்படுத்தினார். ஐம்பது ஆண்டுகளில் வறுமை
முழூமையாக அமெரிக்காவிலிருந்து ஒழிக்கப்படும் என்று உறுதிமொழியளித்தார். இந்த
ஆண்டோடு அமெரிக்காவின் வறுமைகெதிரான போர் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
இந்நிலையில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வறுமையை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளனர்
நியுயார்க் நகர பட்டினித்திற்கெதிரான கூட்டணி என்னும் அமைப்பு.
தற்போதைய நிலையில் சுமார் 49
மில்லியன் அதாவது 4 கோடியே 90 இலட்சம் அமெரிக்க மக்கள் வறுமையில் உள்ளனர். அதாவது
அமெரிக்க மக்கள் தொகையில் 15% வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர். குறிப்பாக
அப்பலேச்சியன் மற்றும் மிசிசிபி நிலக்கரி சுரங்க பனியாளர்களின் வாழ்க்கை மிகவும்
கவலைகுறியதாக உள்ளது. இந்த சுரங்க துறையில் இந்தியா மற்றும் சீனாவின் போட்டியின்
காரணமாக உற்பத்திச்செலவை குறைக்க மிகப்பெரிய அளவில் இயந்திரமயமாக்கியதால் வேலையிழப்பும்,
ஊதியகுறைப்பும் ஏற்பட்டுள்ளது. இது போன்ற கிராமப்பகுதிகளில் “உணவு பாலைவனங்கள்” அதாவது நல்ல நீர் மற்றும் நல்ல உணவு
கிடைப்பதில்லை. அமெரிக்காவில் கறுப்பினத்தினர் மட்டும் வறுமையில் இல்லை
வெள்ளையினத்தவரும் இதில் அடங்குவர்.
நியூயார்க் நகரத்தில் மட்டும்
சுமார் 50,000 மக்கள் வீடின்றியுள்ளனர். பதிமூன்று இலட்சம் மக்கள் உணவுப்பாதுகாப்பின்றி
உள்ளனர். பதினேழு இலட்சம் மக்கள் வறுமையில் உள்ளனர். அமெரிக்க ஐக்கிய நாட்டில் 400
கோடிஸ்வரர்கள் இரண்டு டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமான சொத்துள்ளவர்கள். அதே
நேரத்தில் அந்நாட்டின் பட்ஜட் பற்றாக்குறை சுமார் 600 மில்லியன் டாலர்கள் ஆகும். அமெரிக்க
ஐக்கிய நாட்டின் 40 மாகாணங்கள் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை அமுல்படுத்தவில்லை.


No comments:
Post a Comment