Thursday, 30 January 2014

தியாகிகள் தினம் - காந்தியடிகள் பற்றி சிறப்பு கவிதை








தியாகிகள் தினம்

காந்தியடிகள் பற்றி சிறப்பு கவிதை 


கதராடை கதிரவனே காட்டுவாயா உன் முகம் தனையே

கதராடை கதிரவனே
காட்டுவாயா உன் முகம் தனையே?
இந்தியாவின்
மேற்கில் உதித்த சூரியனே
மேற்கை வென்ற இந்தியனே
அரையாடை பக்கிரியே
அகிம்சையின் சர்க்கரையே
வாள்களை வாய்மை கொண்டு வென்றவன் நீ
தோட்டக்களை தோய்வின்றி கொன்றவன் நீ
வெள்ளை தேசம் கொள்ளையடித்ததை
வெள்ளெந்தியாக தடுத்தவன் நீ
ஆடு மாடாய் அறிவில் குறைந்து
அடிமை நாயாய் இருந்தவனை
ஊக்கம் கொடுத்து உறவை சொல்லி
படையாய் மாற்றிய் பகலவன் நீ
அகிம்சை என்னும்
ஆயுதம் கொண்டு
அடிமைச்சங்கிலி
உடைத்தவனே


சட்டம் மறுக்கும்
திட்டம் கொண்டு
சுதந்திர பட்டம் ஏற்றினாய்
வெள்ளை கூட்டத்திற்கு
சத்தியத்தால்
கட்டம் கட்டினாய்
காதி கொண்டு
நீதி வென்று
ஏழை வீட்டில்
நிதியை பெருக்கினாய்
இங்கிலாந்து
துணிகளையே
ஓரம் கட்டினாய்
சத்திலாத மனிதர் கொண்டு
உப்பு காய்ச்சினாய்
சட்டம் போடும் மனிதரையே
சாய்த்து காட்டினாய்

மதியை கொல்லும்
மதுவை தள்ள
கள்ளை மறுத்தாய்
கள்ளை கொண்டு
கொள்ளையடிப்போருக்கு
தொல்லை கொடுத்தாய்
கதர் துணியாலே - நாட்டில்
வெள்ளையடித்தாய்
உன் நெஞ்சின் நடுவே குளமாக்கி
உன் கண்ணீர் கொண்டு வளமாக்கி
ஒடுக்கப்பட்டோரை கொலுவாக்கி
கடவுளின் பிள்ளை என்றாயே
நாளும் நல்லோர் மனதில் நின்றாயே
இயந்திரத்தை வெறுத்தவனே
இதயங்களை நினைத்தவனே
மரத்து போன மனிதர்களை – உன்
இரக்க உனர்வால் இழுத்தவனே
நாடு பிரிந்து போனதனால்
நாட்டம் இழந்து போனாயோ?
மனிதம் செத்து போனதனால்
உன் உடலை விட்டு போனாயோ?
உனைக் கொன்ற தோட்டக்களுக்கும்
உன் இதயத்தில் இடம் தந்தவனே
ஒருமுறை மீண்டு வர மாட்டாயா?
வாழ்ந்து போன சத்தியமே
சரித்திரம் உனை பேசும் நித்தமுமே
கதராடை கதிரவனே
காட்டுவாயா உன் முகம் தனையே
ரெ.ஐயப்பன்



The most beautiful human being in the world
The real leader


The path of Gandhi
Check yourself
Need of the hour

No comments:

Post a Comment