Friday, 11 October 2013

இதோ ஒர் இலட்சிய இளைஞன்

இதோ ஒர் இலட்சிய இளைஞன்
சுகமான வாழ்க்கையை வாழ துடிக்கும் கோடிக்கணக்கான மனிதர்களுக்கு மத்தியில் இலட்சிய மனிதர்கள் தியாகத்தின் அடையாளாமாகவும், தன்னலமில்லா குணத்தின் தூதுவர்களாக இந்த மனிதக்கூட்டத்தில் இன்னமும் அவதரித்துக் கொண்டுத்தான் இருக்கிறார்கள். இவர்களால் தான் இன்னமும் உண்மை இந்த பூமியில் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. ராஜிவ் சண்டேல் ஓர் வறண்ட பூமிக்கு உயிர் கொண்டு வர காலில் செறுப்பு கூட அணியாமல் உத்திரபிரதேசத்தின் நிலத்தின் கல்லிலும் முள்ளிலும் சுட்டெரிக்கும் வெய்யிலில் போராடிக்கொண்டிருக்கிறார். இவர் தான் நமது கதாநாயகன்.
          உத்திரபிரதேசத்தின் அலகாபாத் மாவட்டதில் கஜினி என்ற சிறிய கிராமத்தில் பிறந்த ராஜிவ் சண்டேல் அலகாபாத் பல்கலைகழத்தில் பட்டம் பயின்றவர். இந்தி பத்திரிக்கைகளில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய இவருக்கு தன் சொந்த மண்ணின் தண்ணிர் பிரச்சனை மற்றும் வறட்சி கண்ணில் விழுந்த தூசாய் உருத்தியது. இதை நோக்கி சிந்திக்க தொடங்கினார். 
1970களில் தொடங்கப்பட்ட வனசாகர் திட்டம் பலன் தராமல் இருப்பதற்கான காரணங்களை அறிய விரும்பி மத்திய அரசின் பிராந்திய அலுவலகங்களுக்கு சென்ற இவருக்கு “கேட்பதற்கு நீ யார் என்ற கேள்விதான் பதிலாக கிடைத்தது, சோர்ந்துவிடாத இவர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் 500க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்து தகவல்களை சேகரித்துள்ளார். வனசாகர் திட்டம் துவங்கும் மத்திய பிரதேசத்தின் மேஜா மாவட்டத்திலிருந்து சித்தி மாவட்டம் வரை நடந்தே பார்வையிட்டுள்ளார். ஓரிடத்தில் தவறாக நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்தை கண்டறிந்து மத்திய பிரதேச நீர் பாசன துறை அமைச்சர் சிவபால் சிங்கிடம் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.  ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் தவறிழைத்த சிலரை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
    மத்திய பிரதேசம், பிகார் மற்றும் உத்திரபிரதேசம் பகுதிகளுக்கு பயன் தரும் இத்திட்டத்திற்கு கடந்த 5 ஆண்டுகளில் 1,200 கோடி ரூபாய்கள் செலவழித்தும் எந்த கிராமத்திற்கும் ஒரு சொட்டு நீர் கூட கிடைக்கவில்லை என்று வருந்துகிறார் ராஜிவ சண்டேல்.  இவருடைய முயற்ச்சியால் அம்பலப்படுத்தப்பட்ட இவ்விவகாரம் பெருளாதார குற்றங்களை விசாரிக்கும் பிரிவின் கீழ் தற்போது விசாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.  
      இத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் யமுனை நதி நீரை மின்னுற்பத்திக்கு பயன்படுத்தும் திட்ட்த்தை எதிர்த்தும், மெஜா வனப்பகுதியில் மான்களை காக்க வன காப்பகம் அமைக்கவும் போராடிக்கொண்டிருக்கிறார்.
    இந்த அரிய மனிதர் ஓசையில்லமல் அரசாங்கம் மற்றும் அதிகாரிகளின் அலட்சியம் என்ற நோயை அறுத்துக்கொண்டிருக்கிறார். இவரை போன்ற மனிதர்கள் தான் தன்னை பற்றி மட்டுமே சிந்திக்கும் நம்மை போன்ற மனிதர்களின் மன சாட்சியை உசுப்புகிறார்கள்.
ரெ.ஐயப்பன்
ஆதாரம்: தி இந்து (தமிழ்) 04/10/13  

No comments:

Post a Comment