Saturday, 3 September 2016

ஆசிரியன்

3/09/2016                    ஆசிரியன்
தமிழ்தாயே
இணக்கம் இல்லாதவர்களுக்கு
வணக்கம் வைப்பதில்லை நான்
சுணக்கம் இல்லாமல்
உனக்கு வைப்பேன்
ஆயிரம் வணக்கங்கள்
ஆசிரியன் என் கவிதை தலைப்பு
ஆசிரியமே என் வாழ்க்கை பிழைப்பு

வெளுக்காத கிழக்குகளை
சலவை செய்யும் ஆதவன்
அடங்காத ஆவினத்தை
ஆள்கின்ற மாதவன்
அரும்பு மலர்களின்
ஆசை நாயகன்
யார் தெரியுமா? ஆசிரியன், ஆம் ஆசிரியன்

ஆள் பிடித்து நடக்கும் குழந்தை
ஆசிரியன் சொல் பட்டதும்
எழுது கோல் பிடித்து நடக்கும்
ஏர் பிடிக்கும் உழவன் முதல்
அரியனை தாள் பிடிக்கும் அரசன் வரை
தொழுவது ஆசிரியனைத் தான்.
.
ஆசிரியன்
வகுப்பறை வானத்தின் வானவில்
வண்ணங்களால் அல்ல,
எண்ணங்களால் அலங்கரிப்பவன்

திசையை கற்பிப்பவன் ஆசிரியன்
நல் இசையை கற்பிப்பவன் ஆசிரியன்
எண்ணை கற்பிப்பவன் ஆசிரியன்
எழுத்தை கற்பிப்பவன் ஆசிரியன்
உடலை கற்பிப்பவன் ஆசிரியன்
நல் உணர்வை கற்பிப்பவன் ஆசிரியன்
அறிவை கற்பிப்பவன் ஆசிரியன்
நல் அறத்தை கற்பிப்பவன் ஆசிரியன்
தூரிகை முதல் ராஜ பேரிகை வரை
கற்பிப்பவன் ஆசிரியன்

ஆயிரம் கணிணிகள் அறிவை அளிக்கலாம்
அறத்தை வளர்ப்பவன் ஆசிரியன் தான்

மாணவர்களுக்காக யோசிப்பவன்
தேவைப்பட்டால் யாசிப்பவன்
புத்தகங்களை நாள்தோறும் வாசிப்பவன்
எளிமையை ஏராளமாய் சுவாசிப்பவன், ஆசிரியன்.

வரம்புகளுக்குள் பயணிப்பவன் அல்ல ஆசிரியன்
வானத்து விளிம்புகளில் பயணிப்பவன் ஆசிரியன்

ஆசிரியன்
சந்தைக்காக உழைப்பவன் அல்ல
சிந்தைக்காக உழைப்பவன்

பணத்திற்கு வணங்குபவன் அல்ல ஆசிரியன்
மாணவ இனத்திற்கு இணங்குபவன் ஆசிரியன்

அறைகளுக்குள் மாணவர் தம்
அறியாமை திரைகளை விலக்குபவன் ஆசிரியன்

அடுத்த தலைமுறைக்கு தூதுவன் ஆசிரியன் தான்
ஆம் ஆசிரியன் தான்
அறிவை அடுத்த தலைமுறை கடத்துகிறான்
தன் வாழ்வை அற வழியில் நடத்துகிறான்

அறிவில் வீழ்பவர்களை தாங்கி பிடிப்பவன் ஆசிரியன்
அவர்களை வீழ்த்தும் சக்திகளை தாக்கி அழிப்பவன் ஆசிரியன்

தூங்கி வழியும் மாணவர்க்கும்
ஏங்கி நிற்கும் மாணவர்க்கும்
திசைகளாய் வழிகாட்டுபவன் ஆசிரியன்

ஆசிரியன்
கரைகளை கடந்த ஞாண நதி
விலை போகாது இவன் மதி
அறிவும், அறமுமே இவன் நிதி
ஆள்வோரே, ஆசிரியனே
நல் ஆசிரியனை மதி மதி மதி
ரெ.ஐயப்பன்









1 comment:

  1. Nice blog sir. This is niranjana. Your old student. 10th 2006 batch ARR. Hope you are fine.

    ReplyDelete