Monday, 13 April 2015

மாண்புமிகு பிரதமர் அவர்களே



மாண்புமிகு பிரதமர் அவர்களே

வங்கி ஊழியர்கள், .டி மற்றும் கார்பரேட் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தாமாக முன்வந்து சமையல் எரிவாயு மானியத்தை இரத்து செய்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது நல்ல முயற்சி தான், வாழ்த்துக்கள். தலைவர்கள் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டும் போது தான் மக்கள் தலைவர்களை பின் தொடர்வார்கள் என்பது நாம் கண்ட வரலாறு. காந்தி முதல் காமராஜ் வரை அனைத்து தலைவர்களுமே தாங்கள் மக்களுக்கு கூறிய அறிவுரைகளை தங்கள் வாழ்வில் வாழ்ந்து காட்டினர். பிரதமர், முதலமைச்சர்கள், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் முதலில் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுப்பார்களா? குளிர் சாதன அறைகள், உயர் ரக வாகனங்கள், நட்சத்திர விடுதிகள் என்று ஆடம்பர வாழ்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு மாண்பு மிகு பிரதமர் அவர்களே ஏன் நீங்கள் சாதாரன அரசு ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் வாழுகின்ற வாழ்வினை  வாழ வேண்டும் என்று வேண்டுகோள் விட வில்லை. இந்த உத்தரவு உங்கள் பத்து லட்ச ரூபாய் கோட்டுப் பாக்கெட்டில் தங்கிவிட்டதோ?  
தூய்மை இந்தியாவுக்காக பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து விளம்பரம் தேடிக் கொண்டிருக்கும் உங்கள் அரசு தலைமை செயலகங்களில் உள்ள குளிர் சாதன அறைகள், இரயில்களில் பயனிகளின் எண்ணிக்கை குறைக்கும் குளிர் சாதன வசதி கொண்ட பெட்டிகள், குளிர் சாதன வசதி கொண்ட மகிழுந்துகள்  போன்றவற்றில் உள்ள குளிர் சாதன வசதியை நீக்க உத்தரவிட்டால் தியாகமும் உழைப்பும் நிறைந்த இந்தியாவின் வளிமண்டலம் தூய்மை பெறும் என்பதை உங்களுக்கு எடுத்துச்சொல்ல என்னைப் போன்ற சாதரன மனிதனால் தான் முடியும்  

No comments:

Post a Comment