விவேகானந்தன்
விவேகானந்தன், இவன் அகன்ற பாரதத்தின்
ஆன்மாவை தட்டி எழுப்பிய ஞானகுரு. இவன் வார்த்தை விதைகளால் நம்பிக்கை விருட்ஷம்
பெற்றோர் ஏராளம், ஏராளம். இவன் ஞானவாள் அறியாமை இருளை கூறுபோட்டது. பகலவனின் பால்
வண்ண கிரணங்களாய் இவன் பேச்சு அறிவொளியை கேட்போர் ஏற்றியது. இவன் மனிதம் பிடித்த
மதவாதி. தன் ஞானத்தால் அறியாமை இரவுகளை கடந்தவன்.உலகத்தையே சகோதர சகோதரிகளே என்ற
இரு வார்த்தை உறவுகளால் சுமந்தவன். கடவுளை தேடிய மனிதர்களுக்கிடையே மனிதனுக்குள்ளே
கடவுளை தேடியவன். மனிதனை கடவுள் நிலைக்கு மாற்ற போராடியவன். எண்ணத்தை கொண்டு
எண்ணியதை அடையமுடியும் என்று எளிமையாய் சொல்லியவன். வலிமையான எண்ணங்களால்
வாழ்க்கையை வளப்படுத்தியவன். எண்ணத்தின் தூய்மையை எல்லா இடத்திலும் சொல்லி
வைத்தான். கங்கைக்குள் ஒளித்துவைத்த சூரிய பொறியாய் ஈரமும், வீரமும் உன் இதயத்தில்
வழிந்தது. அமைதிப்புறாக்களை அனைவர் நெஞ்சிலும் பறக்கவைத்தவன். தன் சிந்தனை
சீறல்களால் பலரின் வாழ்க்கையை சிறக்க வைத்தவன்.காலம் சுமந்துவந்த கற்பக விருட்ஷம்
விவேகானந்தன். கேள்விக்குறிகளை ஆச்சரிய குறிகளாக்கும் வித்தை அறிந்தவன்
விவேகானந்தன்.துரும்பு மனிதர்களின் நாடி நரம்புகளில் தன் கரும்பு கருத்துக்களால்
இரும்பின் உறுதியை ஏற்றியவன் விவேகானந்தன். வெள்ளை தேசங்களில் வெற்றிக்கொடியை
கட்டியவன் விவேகானந்தன். மனிதகுலத்தின் எழுச்சி நாயகனாக தேசங்களை கடந்தவன்
விவேகானந்தன். சடங்குகளில் மூழ்கியிருந்த மக்களின் அறியாமை எண்ண கிடங்குகளை
கொளுத்தியவன் விவேகானந்தன். பஞ்சையாய், பராரியாய் இருந்த பாரத மக்களின் பக்கம் தன்
பார்வையை செலுத்தியவன் விவேகானந்தன்.வேதங்களின் சாரத்தை சாதாரன மக்களின் மனவயலில்
கொட்டியவன் விவேகானந்தன்.வர்ண பேதத்தை வசைமாறி திட்டியவன் விவேகானந்தன்.மனிதட்நேயத்தை
அங்கிகேனாதபடி உலகெங்கும் கொட்டியவன் விவேகனந்தன். ஆற்றல் மிகுந்த அமைதி, வலிமையான
அன்பு என புதிய சிந்தனைகளை பூக்க வைத்தவன் விவேகானந்தன். மதங்களை காக்க மடம்
வைத்தோர் பலருண்டு, ஆனால் மனிதனை காக்க ஸ்ரீராமகிருஷ்ண மடம் வைத்தான்
விவேகானந்தன். அவன் புகழ் இந்த பிறை நிலா உலா வரும் வரை இந்த மனிதர்களின் எண்ண
வயல்களில் நம்பிக்கை விருட்ஷங்களை வளர்த்துக்கொண்டுதான் இருக்கும். வாழ்க
விவேகானந்தரின் சிந்தனைகள், வளர்க அவர் புகழ்.
No comments:
Post a Comment