எண்ண “மையில்” சிந்தியது
கம்பன் காணாத
கண் கொண்டு நோக்கினேன்,
இராமனை.
இராமன்
துயரம் பாயும் துன்பநதி
சுமக்கும் அன்பர்களின் இன்ப நதி
இராமன்
உடைக்காமல் இருந்திருந்தால் – இலங்கை
எரியாமல் இருந்திருக்கும்
இராமன்
சிரிக்காமல் இருந்திருந்தால் – சீதை
அழாமல் இருந்திருப்பாள்.
இராமன்
கல்லெறியாமல் இருந்திருந்தால் – அவன்
காடு செல்லாமல் இருந்திருப்பான்
இராமன்
மறையாமல் வென்றிருந்தால்
மறை போற்ற வாழ்ந்திருப்பான்
இராமன்
எரிதீயில் தள்ளியதால்
எரிநெஞ்சம் பெற்றுவிட்டான்
அன்பிரக்கம் அத்தனையும்
அதிலிட்டு எரித்துவிட்டான்
இராமா!
நீ பிறந்ததனால்
பல கோடி சண்டை இங்கே
பிறக்காமல் இருந்திருந்தால்
பல கோடி மிச்சம் இங்கே (மக்களின்
வரிப்பணம்)
சு.ஜெயராஜ்
தமிழாசிரியர்
No comments:
Post a Comment