Sunday, 4 May 2014

கார்ல் மார்க்ஸ்



கார்ல் மார்க்ஸ்

கல்லறை இருட்டில் தீக்குச்சி கொளுத்துவதைக் கூட முதாலாளித்துவமும், அரச வர்கங்களும் முறியடித்த காலத்தில் அறிவாயுதம் ஏந்தி மாளிகைகளின் அதிகார சுவர்களை வியர்வை துளிகளால் உடைத்தெரிந்தவன் கார்ல் மார்க்ஸ். பரம்பரை குணங்களையும் நம்பிக்கைகளையும் தன் அறிவால் பரிசோதித்து மக்களுக்கு எதிரான அத்தனை அமைப்புகளையும் உடைத்து மாற்றாக சமூகத்தில் உள்ள தனி நபர்களின் சுய மரியாதையை முன் நிறுத்தி சமூக பொருளாதார நிலைகளில் அனைத்து மனிதர்களும் சமம் என்ற கருத்தை நிலை பெறச்செய்ய போராடியவன் கார்ல் மார்க்ஸ். இன்று அந்த மாமனிதனின் 196 வது பிறந்த நாள்.

பிரித்து தரப்படாத ஊதியமே லாபம். லாபமே முதலாளி, தொழிலாளி என்று வர்க்க வேறுபாட்டை உருவாக்குகிறது.

ஒரு பொருளின் உருவாக்கத்தின் பணம் எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியமானது உழைப்பு. உழைப்பு தான் பணத்தை உருவக்கியது, உழைப்பு தான் பொருளை உருவாக்கியது. ஒரு பொருளை உற்பத்தி செய்வதில் பணத்தை கொடுப்பவன் செல்வந்தனாகவும், உழைப்பை கொடுப்பவன் ஏழையாகவும் ஏன் இருக்கிறான்?
 ஒரு பொருளை உற்பத்தி செய்வதில் சம பங்கு காரணியாய் உள்ள முதலாளியை உயர்வாகவும், தொழிலாளியை தாழ்வாகவும் கருதக்கூடிய சமுக பொதுகருத்துருக்களை மார்க்ஸின் சிந்தை வெளிச்சத்தில் எப்பொழுது விரட்டப்போகிறோம்?
ரெ.ஐயப்பன்



   

No comments:

Post a Comment