சுதந்திரம்
இது இழப்புகளால் வந்த சிறப்பு
கசப்புகளால் வந்த இனிப்பு
உயிரை துச்சமென்றவர்களின் எச்சம்
அவர்கள் விட்டுப் போன மிச்சம்
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
இது தியாகிகளின் மந்திரம்
அவர்களை இயக்கிய தந்திரம்
எந்திரங்கள் இல்லாத போராட்டம்
நாடு முழுவதும் தேசியமே நீரோட்டம்
எளிய மனிதர்களின் வேள்வி
வெள்ளையனே ஏன் நீ இங்கு என்ற கேள்வி
வந்தே மாதரம்! வந்தே மாதரம்! – என்ற
குரல்களின் நியாயம்
உடல்களின் காயம்
தூக்கில் தொங்கியவர்களால்
நிமிர்ந்த தேசம்
உப்பு கூட உன்மையானது
தியாகமே உங்கள் தன்மையானது
நீங்கள் இழந்தீர்கள்
நாங்கள் வாழ்வதற்காக
நீங்கள் செத்தீர்கள்
உங்கள் வியர்வை காற்றில் தான்
நாங்கள் இதமாயிக்கின்றோம்
உங்கள் இரத்த சகதியில் தான்
விவசாயம் செய்கின்றோம்
நாங்கள் சுதந்திரமாய் வாழ
நீங்கள் சிறை பட்டீர்
உங்கள் உயிர்காற்றில் தான்
மூவர்ண கொடி பறக்கிறது
எங்கள் வாழ்வு சிறக்கிறது
உங்களை போற்றுவதில் தான்
எங்கள் புனிதம் இருக்கிறது
தியாகத்தின் விளைநிலமே
உங்களின் விதைகளாவோம்
அற விருட்சத்தின் அடியில்
அமைதியாய் வாழ்வோம்
வாழ்க தியாகிகளின் புகழ்
கற்போம்! நிற்போம்!
ரெ.ஐயப்பன்
fabulous words by divya
ReplyDelete