இன்னொரு தேசிய கீதம்
தூரத் தெரியும் வானம்
சிறு துரும்பாய் இன்று மாறும்
இமைகள் சுமக்கும் பாரம்
நம்பிக்கையே நீ இன்னொரு தேசிய கீதம்
கடலை குடிக்கும் தாகம்
வெற்றியை நோக்கிய பயணம்
துளியாய் தெரியும் காலம்
நம்பிக்கையே நீ இன்னொரு தேசிய கீதம்
தளைகளை அறுக்கும் மனம்
தடைகளை உடைக்கும் குணம்
உறுதி என்பதே மதம்
நம்பிக்கையே நீ இன்னொரு தேசிய கீதம்
மலையாய் நிற்கும் இடர்கள்
தடங்கள் அனைத்தும் தடங்கல்
சோராது எனது ம்னங்கள்
நம்பிக்கையே நீ இன்னொரு தேசிய கீதம்
முயற்ச்சி என்பது யாகம்
தோல்வி என்பது போகும்
வெற்றியின் மீதே தாகம்
நம்பிக்கையே நீ இன்னொரு தேசிய கீதம்
இலட்சியமே
இரவும் பகலும் உன் நினைவு
விடியாமல் போய் விடுமா இவ்விரவு
ஆயுள் வரை காத்திருப்பேன்
அசராமல் உழைத்திருப்பேன்
நம்பிக்கையே நீ இன்னொரு தேசிய கீதம்
மலையை நகர்த்தும் நகங்கள்
யுகங்கள் உழைக்கும் கரங்கள்
தடைகள் அனைத்தும் உரங்கள்
நம்பிக்கையே நீ இன்னொரு தேசிய கீதம்
இலட்சியமே
உள்ளம் ஒன்று இருக்கும் வரை
உனை விதைப்பேன் இறக்கும் வரை
ஏனென்றால்
நம்பிக்கையே நீ இன்னொரு தேசிய கீதம்
ரெ.ஐயப்பன்
Congrats sir......great to see your poem in your blog. This poem is really fantastic.......continue with your work and I am expecting everyday a poem.All the BEST sir.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletesuper ji.. happy to see you through your blogs. hopeful lyrics :) keep on posting..
ReplyDeletesuper sir fabulous.strength lyrics!
ReplyDeleteanirudh