தேர்தல்
இது அரியணை பந்தயம்
வெல்வோர் ஆள்வது நிச்சயம்
ஆண்டியும் அரசனாகலாம்
பல்லாக்கு ராஜாக்களை
பக்கத்தில் பார்க்கலாம்
நாட்டுக்கு உழைப்போம்
என்ற சத்தங்களை கேட்கலாம்
ஒலிபெருக்கிகாரருக்கு
ஒளிமயமான காலமிது
அச்சகத்தார் காசு பார்க்கும் நேரமிது
இங்கு தாஜா செய்யாமல்
யாரும் ராஜா ஆக முடியாது
கைக்கூப்பும் மந்திரிகள்
காலில் விழும் மந்திரிகள்
கும்பிட்டு கும்பிட்டு கூண்
விழுந்த மந்திரிகள் – அனைவருமே
தேர்தல்களில் தந்திரிகள்.
இவர்கள் காலில் விழுவதே
நிமிர்ந்து நிற்க்கத்தான்
வாசனை வார்த்தைகளால்
ஆகாய கோட்டைகளை கட்டுவர்
வானவில் திட்டங்களை
வகை வகையாய் அடுக்குவர்
மக்கள் மதியிழக்க
மதுவினை அள்ளிவிடுவர்
தன் செல்வத்தில் கொஞ்சம்
கிள்ளி எறிவர்
மனசாட்சி வாக்குகளை விட
பனசாட்சி வாக்குகளையே நம்புவர்
சுய விளம்பரம் விண்ணை முட்டும்
போகாத ஊருக்கு வழி சொல்வர்
பெய்யாத மழைக்கு குடை பிடிப்பர்
போடாத திட்டங்கள்
இல்லாத பட்டங்கள்
அணி வகுக்கும்
உண்மையை நினைத்தாலோ
மனம் கணக்கும்
இங்கு மையின்
கரும்புள்ளிகளால் தான்
பெரும் புள்ளிகளே ஆகின்றனர்
ஆனால் இவர்களே
கரும்புள்ளிகள் ஆகும்போது
நாம் வெறும் புள்ளிகள் ஆகின்றோம்
மனம் நொந்து நொந்து சாகின்றோம்
ஆட்சிக்கட்டில்களை அசைத்தாலும்
காட்சிப் பொருட்களில் மாற்றமில்லை
நாம் சாட்சிகளாகவே இருப்பதுவும் தீரவில்லை
சாத்தான்களை சட்டம் செய்யவிட்டு
சத்தமின்றி இருக்கின்றோம்
கழுதை போல அத்தனையும் பொறுக்கின்றோம்
யுத்தம் ஒன்று தேவைதான்
நாம் நித்தம் வாழும் பூமியில்
துடைத்திடுவோம் அழுக்குகளை - துடைப்பத்தால்
தில்லி காட்டிய வழியில்
தீமையை ஒழிப்போம்
தீயாய்
நல்லன செய்யும் பேயாய் எழுவோம்
தேசத்தை நன்றாய் உழுவோம்.
ரெ.ஐயப்பன்
www.ayyappangeo.blogspot.com